உள்நாடு

இலங்கைக்கு வருபவர்களுக்கான புதிய வழிகாட்டல்கள்

(UTV | கொழும்பு) – புதிய வழிகாட்டல்களின்படி, வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை, அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக தீர்மானிக்கப்பட்ட ஹோட்டல் அல்லது இடத்தில் தங்க வேண்டியது அவசியம்.

அங்கு முழுமையாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்றாளர் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை என புதிய வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றுக் கொள்ளாத ஒருவர், பரிசோதனை முடிவில் கொரோனா தொற்றாளர் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டாலும் கூட, அவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்களில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(அரசாங்கத் தகவல் திணைக்களம்)

Related posts

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படும்!

விநியோகத்திற்கு அமைவாக அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தீர்மானிக்கப்படும்

வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் [வர்த்தமானி]