உள்நாடு

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஜேர்மனியின் சொகுசுக் கப்பல்!

(UTV | கொழும்பு) –

ஜேர்மனியின் Aida Bella என்ற சொகுசுக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. ஜேர்மனியின் Aida Bella என்ற சொகுசுக் கப்பலானது நாளைய தினம் அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இக் கப்பலானது Aida Cruises நிறுவனத்தால் இயக்கப்படுகின்றது.
இக் கப்பலில் ஆயிரத்து 900 பயணிகள் மற்றும் 730 பணியாளர்கள் வருகை தரவுள்ளனர். 13 அடுக்குகளை கொண்டுள்ள இக் கப்பலில் ஆயிரத்து 25 விருந்தினர் அறைகள், 12 மதுபானசாலைகள், 8 நீச்சல் தடாகங்கள், 3 ஓய்வறைகள் மற்றும் 7 உணவகங்களை கொண்டுள்ளது.

Aitken Spence PLC இன் துணை நிறுவனமான Aitken Spence Shipping Ltd நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கப்பல்களை இயக்குபவர்களுக்கான சேவைகளை தொடர்ந்து வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்

தொற்றில் இருந்து இன்றும் 324 பேர் மீண்டனர்

துறைமுக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தம்