உள்நாடு

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு.

இம்மாதம் 15 ஆம் திகதி 10 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதை அடுத்து இலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மீண்டும் எழுச்சியடைந்துள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்நிலை தொடருமானால், போருக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறையின் உச்ச நிலையை பதிவான 2018 ஆம் ஆண்டை விடவும் நல்ல நிலையை அடைய முடியும்.

உயிர்தத ஞாயிறு  தாக்குதல், கொவிட் – 19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுற்றுலா வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது.

ஆனால் சுற்றுலா அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களால் ஆரம்பிக்கப்பட்ட முறையான வேலைத்திட்டத்தினால் தற்போது வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Related posts

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு

editor

கோடிக்கணக்கில் பணமோசடி செய்த திலினி பிரியமாலிக்கு பிணை

புதிய சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு