உள்நாடு

இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து IMF இனது உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை

(UTV | கொழும்பு) –   இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் கடனுதவி பெறுவது தொடர்பான பூர்வாங்க உடன்படிக்கையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.

04 ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் கடன் தொகை 03 பில்லியன் டொலர்களாகும்.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளோ அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளோ இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

Related posts

போதைப்பொருளுடன் யாழில் இருவர் சிக்கினர்

பேரூந்து சாரதிகள் இன்று முதல் கண்காணிக்கப்படுவர்

இது கொரோனாவின் மிகப்பெரிய இரண்டாம் அலை