உள்நாடு

“இலங்கைக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை” நிமல்

இலங்கை மட்டுமன்றி உலகில் செல்வந்த நாடுகளில் கூட விமான சேவைகள் நஷ்டத்திலேயே இயங்குகின்றன. சில நாடுகள் அந்த நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கில் நிதி வழங்குகின்றன ஆனால்  இலங்கையால் அவ்வாறு செய்ய முடியாது என்று தெரிவித்த அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா இலங்கைக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை என்றார்.     

அத்துடன் விமான சேவை ஊழியர்கள் 470 பேர் ஒரே தடவையில் தமது பதவியை இராஜிநாமா செய்ததாலேயே 791 பேரை புதிதாக இணைத்துக் கொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்ற பிரதமரிடத்திலான  கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி எம்.பியான ஹேஷா விதானகே எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பிரதமரின் சார்பில் பதிலளிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்த அமைச்சர்   தெரிவிக்கையில்:

உலகில் எம்மை விட செல்வந்த நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளிலும் விமான சேவைகள் நஷ்டத்திலேயே இயங்குகின்றன. இந்திய எயார்லைன்சுக்கு என்ன நடந்தது? அதுவும் நஷ்டத்திலேயே இயங்குகிறது. சுவிஸ் எயார் தற்போது சேவையில் உள்ளதா? அதுவும் கிடையாது.

எமிரேட்ஸ் போன்ற விமான சேவைக்கு அந்த நாடுகள் 2 அல்லது 3பில்லியன் அமெரிக்கன் டொலர்களை தொடர்ச்சியாக வழங்குகின்றன. இலங்கை போன்ற நாடுகளுக்கு அவ்வாறு செய்ய முடியாது. அதனால் எமது நாடு போன்ற சிறு அளவிலான விமான சேவைகளை நடத்தும் நிறுவனங்கள் பிரச்சினைகளை எதிர் நோக்கியே ஆக வேண்டும் என்றார்.

Related posts

இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

இன்றும் 698 பேர் பூரண குணம்

இன்று மேலும் பலருக்கு கொவிட் உறுதி