உள்நாடு

இலங்கைக்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகளை வழங்க சீனா தீர்மானம்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உதவும் வகையில் இந்த தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வாடகை வாகனங்களை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்

கிளினிக் பிரிவுக்கு விசேட தொலைப்பேசி இலக்கம்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கான அதிர்ச்சி காரணம் வெளியானது

editor