விளையாட்டு

இலங்கைக்கு எதிரான நியூஸிலாந்து இருபதுக்கு 20 குழாம் அறிவிப்பு; வில்லியம்சன் நீக்கம்

(UTVNEWS|COLOMBO) -இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 போட்டிக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து குழாத்திலிருந்து கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர், செப்டெம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. போட்டிகள் அனைத்தும் கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்து குழாம் :-

டிம் சௌதி (தலைவர்), டொட் எஸ்ட்ல், டொம் ப்ரூஸ், கொலின் டி கிரெண்டோம், லொக்கி பேர்கஸன், மார்டின் கப்டில், ஸ்கொட் குகளெய்ன், டெரில் மிச்சல், கொலின் மன்ரோ, செத் ரென்ஸ், மிச்சல் சென்ட்னர், டிம் சௌதி, இஸ் சோதி, ரொஸ் டெய்லர்

Related posts

சிறந்த விருதினை தட்டிச் சென்ற ‘அசாம்’

IPL 2021 போட்டிகள் அக்டோபரில்

இலங்கை ஜூடோ அணி சார்பாக சாமர