விளையாட்டு

இலங்கைக்கு எதிராக மோதவுள்ள ஆஸி. குழாம் அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பின்னர் அவுஸ்திரேலியா செல்லவுள்ளதுடன், அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ள 14 பேர் அடங்கிய அவுஸ்திரேலிய இருபதுக்கு 20 வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில், அடம் ஷம்பா மற்றும் அஸ்டன் டேர்னர் ஆகியோர் சகலதுறை வீரர்களாக இலங்கை அணிக்கு எதிராக செயற்படவிருக்கின்றனர். முன்னதாக, அஸ்டன் டேர்னர் காயம் காரணமாக ஆஸி. அணியில் இடம்பெறமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இருபதுக்கு-20 தொடரின் முதல் போட்டி இம்மாதம் 27ஆம் திகதி அடிலைட் நகரில் ஆரம்பமாகவுள்ளது.

இதன் பின்னர் இம்மாதம் 30ஆம் திகதி இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெறவிருக்கின்றது. தொடர்ந்து இறுதி இருபதுக்கு-20 போட்டி மெல்பர்ன் நகரில் நவம்பர் மாதம் 01ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

அவுஸ்திரேலிய இருபதுக்கு-20 குழாம்

ஆரோன் பின்ச் (அணித்தலைவர்)
அஸ்டன் ஏகர்
அலெக்ஸ் கேரி
பேட் கம்மின்ஸ்
கிளேன் மெக்ஸ்வெல்
பென் மெக்டெர்மட்
கேன் ரிச்சரட்சன்
ஸ்டீவ் ஸ்மித்
பில்லி ஸ்டேன்லேக்
மிச்செல் ஸ்டார்க்
அஸ்டன் டேனர்
அன்ட்ரூ டை
டேவிட் வோர்னர்
அடம் ஷம்பா

Related posts

தசுன் ஷானக்க நீக்கம் – புதிய தலைவர் இன்று நியமிப்பு!

போட்டியின் திருப்புமுனை, தந்தை குறித்து தனஞ்சய கருத்து…

கோலியின் தலைமைத்துவம் தொடர்பில் புதிய கருத்து