உள்நாடு

இலங்கைக்கு அவுஸ்திரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதி நன்கொடை

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு அவுஸ்திரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதியை நன்கொடை வழங்கியுள்ளது.

குறித்த நன்கொடையானது  கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கும், இலங்கை மக்களின் தேவைகளுக்கும் உதவியளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் சுமார் 3000 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கவும் அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது.

Related posts

அறநெறி பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு

இலங்கை மின்சார சபை பேச்சாளர் நொயல் பிரியந்தவின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.ஜீவன் இராஜேந்திரன்

அஜித் பிரசன்னவுக்கு பிணை