உள்நாடு

இலங்கைக்குவரும் சீன ஆய்வு கப்பலால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்!

(UTV | கொழும்பு) –

அடுத்தாண்டு ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான கோரிக்கையை சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிங் யாங் ஹாங் 03 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல் ஜனவரி 5ஆம் திகதி முதல் மே மாதம் வரை இந்தியப் பெருங்கடலில் ஆய்வுப் பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் இலங்கை மற்றும் மாலைதீவு துறைமுகங்களில் சீனக்கப்பல் நங்கூரமிடப்படும் என்றும் அதற்காக இலங்கை மற்றும் மாலைதீவு அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த கப்பலுக்கு கடல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என இந்திய அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மைத்திரிபால சிறிசேன மற்றும் பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் செப்டெம்பரில்..!

அரச நிறுவனங்களை இன்று முதல் பரிசோதனைக்கு

மின் கட்டண அதிகரிப்பும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளும்