(UTV|COLOMBO)-இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால்
வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும்ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார். அதன்படி இந்த வரிச் சலுகைஇம்மாதம் 22ம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட
திட்டம் (ஜி.எஸ்.பி)
2017ம் ஆண்டு டிசம்பர் 31ம்திகதியுடன் காலாவதியாகிய நிலையில் அதன் மீள் அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவில்லை. இதன் விளைவாகஜி.எஸ்.பி கடந்த 2017ம் ஆண்டுடன் காலாவதியாகியதால், இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும்பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் எற்றுமதிகளுக்கு ஜனவரி 1,2018 முதல் அமுலுக்கு வரும் வகையில்முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்பட்டது. எவ்வாறாயினும் மீண்டும் அந்த வரிச் சலுகையை வழங்குவதற்காக அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]