வணிகம்

இலங்கைக்கான ஜிஎஸ் பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பம் அங்கீகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கான ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்ப்தை இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சரவை பேரவை (வெளிநாடு மற்றும் வர்த்தக அமைச்சர்கள்) இலங்கைக்கான ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பத்தை இன்று அங்கீகரித்துள்ளது.

ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான முக்கிய விடயங்கள் மூன்றை இலங்கை பூத்தி செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் பாராளுமன்றம் இந்த விண்ணப்பத்தை ஏற்கனவே அங்கீரித்துள்ளது.

ஜிஎஸ்பி தொடர்பான உத்தியோகபூர்வ நடைமுறையிலான விடயங்கள் அடுத்தவாரத்தில் முன்னெடுக்கப்படும் என்று அரச தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

மாம்பழச் செய்கையை விஸ்தரிப்பதற்குத் திட்டம்

இன்றைய தங்க நிலவரம்

வேலையை இழந்த 20,000 ஆடைத் தொழிலாளர்கள்!