உள்நாடு

இறைச்சி கடைகளுக்கு பூட்டு!

(UTV | கொழும்பு) –

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 04 ஆம் திகதி ஞாயிறன்று கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் விலங்கறுமனை மற்றும் இறைச்சிக் கடைகள் அனைத்தும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார்.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவித்தலுக்கு அமைவாக அன்றைய தினம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, கோழியிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை நிலையங்களையும் விலங்கறுமனைகளையும் பூட்டுமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு கடிதம் மூலம் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இக்கடிதத்தின் பிரதிகள் பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு

மருதானை தீ விபத்தில் ஒருவர் பலி

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 152 பேர்