சூடான செய்திகள் 1விளையாட்டு

இறுதி ஓவரில் தப்பு நடந்து விட்டது..-ஒப்புக் கொண்ட நடுவர் தர்மசேன

 

(UTVNEWS | COLOMBO) -உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சுப்பர் ஓவரின் போது 06 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்த சந்தர்ப்பஹ்தில் தப்பு நடந்தேறியுள்ளதாக பின்னர் மீள் பரிசீலனையின் போது புலப்பட்டதாக போட்டி நடுவராக இருந்த இலங்கையின் குமார தர்மசேன தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த சந்தர்ப்பத்தில் மூன்றாவது போட்டி நடுவராக இருந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் அதனை எம்மால் ஒன்றும் செய்ய முடியாது போனது எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் தனக்கும் இரண்டாவது நடுவருக்கும் புலப்பட்டது துடுப்பாட்ட வீரர்கள் இரண்டு ஓட்டங்களை பூர்த்தி செய்து நான்கு ஓட்டங்களுடன் 06 ஓட்டங்களை பெற்றமையே..

எவ்வாறாயினும். ஒரே சந்தர்ப்பத்தில் அனைத்தினையும் கவனிக்க எனக்கு 06 கண்கள் இல்லை என்றும் தர்மசேன தெரிவித்துள்ளார்.

தனது நடுநிலைமையினால் குறைந்தளவு பிழைகளை செய்த பட்டியலில் தான் முதலிடத்தில் உள்ளதாகவும், இதனை பெரிது படுத்துவது கவளிகுரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தர்மசேனவினால் வழங்கப்பட்ட குறித்த தீர்ப்பினால் நியூசிலாந்து அணிக்கு உலகக் கிண்ணம் கை நலுவியமை உலகளாவிய ரீதியில் பேசுபொருளாக இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏழு விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி

குசல் ஜனித் பெரேரா போட்டிகளில் இருந்து நீக்கம்…

வடக்கு கிழக்கில் தொல்பொருள் ஆய்வுகள்