உள்நாடு

இறுதியாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் கடற்படையினர்

(UTV | கொவிட் 19) -கொரோனா தொற்றாளர்களாக இறுதியாக அடையாளங்காணப்பட்ட 07  பேரும் கடற்படை வீரர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 863 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் இனங்காணப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அவர்களில் 13 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொருவர் கடற்படையுடன்நெருங்கிய தொடர்பில் ​இருந்தவர் ஏனைய இருவரும் டுபாயில் இருந்து வந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts

பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற சுந்தரலிங்கம் பிரதீப்

editor

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மேலும் 6 மனுத்தாக்கல்

பல பிரதேசங்களில் 9 மணி நேர மின்தடை அமுலுக்கு