தனியார் வாகனங்களின் மீள் இறக்குமதியின் போது இலங்கையில் தற்போதுள்ள வாகனங்களின் சந்தை விலைக்கும் புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இல்லையெனில் இன்று சந்தையில் வாகனங்களின் விலை குறையும் பட்சத்தில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து டொலர் கையிருப்பு பாதிக்கப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இவ்விரு சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்றார்.
இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்காக சுமார் ஒரு பில்லியன் டொலர்களை திட்டமிட்ட வகையில் செலவிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.