சூடான செய்திகள் 1

இறக்குமதி செய்யப்படும் பால் மா குறித்த பரிசோதனைத் தீர்வை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துமாறு கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – மனித உடலுக்கு ஒவ்வாத இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கியுள்ளதாக தெரிவித்து, இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு எதிராக கருத்துத் தொடர்பில் தெளிவான கருத்தொன்றினை பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு நோயாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மா தொடர்பில் தெளிவான கருத்தொன்றை அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், சில அரசியல்வாதிகளினால் வெளிநாட்டு ஆய்வு கூடங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக கூறப்படும் பால் மா மாதிரிகள் குறித்த பரிசோதனை அறிக்கை பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் அவ்வமைப்பின் செயலாளர் தம்மிக எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இறக்குதி செய்யப்படும் பால் மா பிரச்சினை தொடர்பில் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வொன்றை அரசாங்கமோ அல்லது அது தொடர்பான அமைப்புக்களோ இதுவரையில் முன்வைக்கவில்லை. பால் மா நிறுவனங்களினால் மறைக்கப்பட்டு வரும் உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்துவது பொறுப்பான அரசாங்கத்தின் கடப்பாடாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

போலி ஆவணங்களை தயாரிக்கும் நிறுவனம் சுற்றிவளைப்பு – மூவர் கைது

அழிக்கப்பட்ட குரல் பதிவுகளின் அறிக்கை இரகசியப் பொலிஸாரிடம்

தடைகளுக்கும் முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியிலே தான் அரசு பாரிய பணிகளை முன்னடுத்து வருகின்றது – வவுனியாவில் அமைச்சர் ரிஷாத்