சூடான செய்திகள் 1வணிகம்

இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளை பரிசோதிக்க இரசாயன கூடம்

(UTV|COLOMBO) நாட்டில் பயன்படுத்தப்படும் 16 ஆயிரம் மருந்துகளுக்கு மிகவும் பாதுகாப்பு நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மருந்து விநியோக பிரிவுப் பணிப்பாளர் டொக்டர் ஏ.டி.சுதர்ஷன தெரிவிக்கையில் கடந்த காலங்களில் அரச வைத்தியசாலைகளில் அஸ்பிரின் மற்றும் லொசாட்டன் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டமை தயாரிப்பு மற்றும் கேள்வி விதி முறைகளின் அடிப்படையில் செயற்பட்டதனாலேயே என்று தெரிவித்துள்ளார்.

மேற்படி இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளையும் பரிசோதிப்பதற்கான இரசாயன கூடம் ஒன்றை அமைப்பதற்கு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

Related posts

மர ஆலை பதிவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாதத்திற்குள்.

உள்நாட்டு பாற்பண்ணைத் துறைக்கு ஆதரவளிக்க சிறிய தொழிற்துறையை உருவாக்கும் Pelwatte Industries

பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று கூடுகிறது