வணிகம்

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள் தொடர்பில் அவதானம்

(UTV|கொழும்பு) – இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(18) நடைபெறவுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்நடவடிக்கையுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

தற்போது உள்ள இறக்குமதி விதிகளுக்கு அமைய, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள், இலங்கை தரநிர்ணய நிறுவனம் மற்றும் சுகதார அமைச்சு ஆகியவை கண்காணிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய சதொச நிறுவனம் தயார்

3,739 மெட்ரிக் டொன் வெற்றிலை ஏற்றுமதி

இலங்கை – பங்களாதேஷுக்கு இடையே 12 புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து