வணிகம்

இறக்குமதி செய்யப்படும் உழுந்திற்கான வரி அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படும் உழுந்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உழுந்திற்கு விதிக்கப்பட்டிருந்த 125 ரூபா வரி, 200 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

உள்ளூர் உழுந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் சிரேஷ்ட விவசாய பொருளியல் நிபுணர் துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் உழுந்து அறுவடை ஆரம்பித்துள்ளமையால், சந்தையில் அதற்கான விலை வீழ்ச்சி அடையக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

உடன் அமுலாகும் வகையில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்படும் உழுந்திற்கான வரி மறு அறிவித்தல் வரை நீடிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 

Related posts

சார்க் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்

இலங்கையில் mcdonald’s கிளைகள் மூடல்!

இலங்கைக்கு, அமெரிக்கா மீண்டும் ஜிஎஸ்பி சலுகை