வணிகம்

இறக்குமதியாகும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

(UTV|COLOMBO) இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி நேற்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான வர்த்தமானி நிதி அமைச்சினால் நேற்று வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி 20 ரூபாவால் அதிகரிப்படவுள்ளது.

உள்நாட்டு வெங்காய செய்கையாளர்களின் உற்பத்தி சந்தைக்கு கொண்டுவரப்படவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2019 இல் 5.1 சதவீதமாக அதிகரிப்பு

சுற்றுலாத்துறை இயல்புக்கு திரும்ப அமெரிக்கா உதவும்

உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் நாளை முதல் அமுலில்