விளையாட்டு

இர்பான் மற்றும் நதீமுக்கு வாழ்நாள் தடை – ஐ.சி.சி

(UTVNEWS|COLOMBO) – ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட ஹாங்காங் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் அஹ்மத் மற்றும் நதீம் அஹ்மதுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) வாழ்நாள் தடை விதித்தது.

ஹாங்காங் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் அகமது, நதீம் அகமது மற்றும் ஹசீப் அம்ஜத். இவர்கள் கடந்த இரு ஆண்டுகளில் உலகின் பல இடங்களில் பங்கேற்ற போட்டிகளில் திட்டமிட்டு ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்துள்ளனர்.

பணத்துக்காக விளையாடியது போன்ற செயல்களில் ஈடுபட்டதை சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு தீர்ப்பாயம், ஆதாரத்துடன் உறுதி செய்தது.

இதையடுத்து இர்பான் அகமது, நதீம் அகமதுவுக்கு ஐ.சி.சி., வாழ்நாள் தடை விதித்தது. ஹசீப் அம்ஜத்துக்கு ஐந்து ஆண்டு தடையும் விதிக்கப்பட்டது

Related posts

பங்களாதேஷிற்கு எதிரான தொடரை தன்வசப்படுத்தியது இலங்கை

137 ஓட்டத்தால் இந்தியா அபார வெற்றி

கொரோனா வலையில் மொயீன்