உள்நாடு

இரு நாட்களுக்கு சுற்றுசூழலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

(UTV | கொழும்பு) – உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைவரும் தமது வீடுகளையும் சுற்றுப்புர சூழலையும் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டதை முன்னெடுக்க வேண்டுமென சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொரோனோ தொற்றுப்பரவலுக்கு மத்தியில் மக்களை ஒன்றிணைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனால் நாளையும் நாளை மறுதினமும் சுற்று சூழலை சுத்தம் செய்வதற்குரிய நாளாக பிரகடனப்படுத்தியுள்ளோம்.

தொடர்ந்து நிலவும் மழைக் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் உள்ளது. கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு நுளம்பு தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் .

எனவே, எமது சூழல் கட்டமைப்பை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் மக்கள் தமது சுற்றுப்புற சூழலை தூய்மையாக்க முன்வர வேண்டும் என என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

 

Related posts

நாளை இடம்பெறவுள்ள ஒன்றிணைந்த போராட்டம்!

இராஜாங்க அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

நாளை குறித்து தீர்மானிக்க ஆளும் கட்சியினர் கூட்டம் இன்று