உள்நாடு

இரு நாட்களில் டீசலுக்கான தட்டுப்பாடு நீங்கும்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் டீசலுக்கான தட்டுப்பாடு நீங்கும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரையில் இரண்டு கப்பல்களிலிருந்து டீசலை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலளர் கே.டி.ஆர். வொல்கா குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு கப்பல்களிலிருந்தும் 45,000 தொன் டீசல் இறக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் 20,000 தொன் டீசலை இறக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலுமொரு டீசல் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், அதற்கான கட்டணத்தை செலுத்தியதன் பின்னர் நாட்டில் காணப்படும் டீசல் நெருக்கடியை குறைத்துக்கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சின் செயலளர் கே.டி.ஆர். வொல்கா தெரிவித்தார்.

Related posts

ரயில் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி

நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் நாளை மூடப்படும்

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலையை குறைக்க முடியும்?