வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு (24) செம்மண்ணோடைப் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களையும் சேர்ந்த எட்டுப்பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அதில், நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இரு குழுக்களிலும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோர் இந்த கைகலப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்