வகைப்படுத்தப்படாத

இருளில் மூழ்கிய வெனிசூலா:15 பேர் உயிரிழப்பு

(UTV|WENEZUELA) கடந்த 2 தினங்களுக்கு முன்பு வெனிசூலா முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நாடே இருளில் மூழ்கியது. இதன் பின்னணியில் அமெரிக்காவின் சதி இருப்பதாக ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ குற்றம் சாட்டுகிறார் என அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.

இதே வேளை,மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் என பலர் பாதிக்கட்டடுள்ளார்கள்.

இந்த நிலையில்,வைத்தியசாலையில் மின்சாரம் இல்லாததால் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெறமுடியாமல் 2 நாட்களில் 15 நோயாளிகள் உயிர் இழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Related posts

சொந்த இடங்களுக்கு சென்றவர்களின் நலன் கருதி விசேட பஸ் சேவைகள்

ஜனாதிபதி, அவுஸ்திரேலிய பிரதமர் சந்திப்பு

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்