வகைப்படுத்தப்படாத

இரும்பு வளைக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)-தொம்பகொடையில் அமைந்துள்ள  இராணுவ போர் கருவி தொழிற்சாலையில் பணிபுரியும் இராணுவ சார்ஜன்டான கே.கே.டீ.எஞ்.என் நதீஷான் புதிய இரும்பு வளைக்கும் இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளார்.

இரும்பு வளைக்கும் இயந்திரமொன்றை பெற்று கொள்வதற்க 18 இலட்சம் ரூபாய் செலவாகிறது. ஆனால் இராணுவ போர்கருவி தொழிற்சாலையின் கட்டளை தளபதியான பிரிகேடியர் எச்.எல். குரூகே தலைமையில் இந்த தொழிற்சலையில் பணிபுரியும் சார்ஜன் கே.கே.டீ.எஞ்.என் நதீஷானினால்; கண்டு பிடித்த இயந்திரமானது 30,000 ரூபாயக்கு குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்தின் உதவியுடன் ராகமையில் நிர்மாணிக்கப்படும் கட்டுமான பணிகள் மிகவும் இலகுவாக நிர்மாணிக்க முடிந்துள்ளது.

இந்த இயந்திரத்தின் மூலம் 19 அடி நீளமுள்ள 100 உருக்கு குழாய்களை வளைத்து பணிகளை இலகுவாக நிறைவேற்றக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி விலகல்

போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

சற்று முன்னர் இருவர் மீது காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு