உள்நாடு

இருமடங்காக அதிகரிக்க போகும் எரிபொருள் ஒதுக்கீடு!

(UTV | கொழும்பு) –  இருமடங்காக அதிகரிக்க போகும் எரிபொருள் ஒதுக்கீடு!அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரு மடங்காக அதிகரிக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த 7 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த மாதம் எரிபொருள் விலைத் திருத்தத்தின் போது 14 லீட்டராக அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் எரிபொருள் ஒதுக்கீட்டு திருத்தமும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் Drone கெமரா பயன்படுத்த நடவடிக்கை

தோல்வியில் ரணில்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,057 ஆக உயர்வு