உள்நாடு

இருபது – மனுத்தாக்கலுக்கு நாளை வரை கால அவகாசம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நாளை(29) வரை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றத்தை நாட கடந்த ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில்,
20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை எதிர்த்து 20 க்கும் குறைவான மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தீர்ப்பை வழங்க 21 நாட்கள் உயர் நீதிமன்றத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலப் பகுதியில் குறித்த சட்டமூலம் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் பாராளுமன்றத்தால் எடுக்க முடியாது.

கடந்த 22 ஆம் திகதி 20வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

தொடர்ந்தும் மழையுடனான காலநிலை

”இது படுமோசமான ஆட்சி” நோர்வே தூதுவரிடம் சஜித்