விளையாட்டு

இருபதுக்கு 20 போட்டியில் 71 பந்துகளில் இரட்டை சதம் அடித்த வீரர்!!

(UDHAYAM, COLOMBO) – ஆப்கானிஸ்தான் அணி வீரர் சபிகுல்லா உள்ளூர் இருபதுக்கு 20 போட்டியில் 71 பந்துகளில் 214 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் கடீஜ் அணியும், சபாகின் அணியும் மோதின.

முதலில் துடுப்பாடிய கடீஜ் அணி 20 ஓவர்கள் முடிவில் 351 ஓட்டங்களை குவித்தது.

அந்த அணியை சேர்ந்த சபிகுல்லா 71 பந்துகளில் 214 ஓட்டங்களை விளாசினார்.

இதில் 21 சிக்ஸர் மற்றும் 16 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து களமிறங்கிய சபாகின் அணி கடீஜ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 107 ஓட்டம் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 244 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சபாகின் அணி தோல்வியடைந்தது.

இதற்கு முன்னதாக டெல்லியில் நடந்த உள்ளூர் இருபதுக்கு போட்டியில் 300 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது சாதனையாக இருந்த நிலையில், கடீஸ் அணி அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளது.

 

Related posts

தென்ஆப்பிரிக்கா அணி தலைவராக குயின்டான் டி காக் நியமனம்

இரண்டாவது T-20 கிரிக்கட் போட்டி 16 ஓட்டங்களால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

CWG 2022 : சரித்திரத்தில் தடம் பதித்தார் யுபுன்