விளையாட்டு

இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றி

(UTV|கொழும்பு) – இலங்கை அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கண்டி – பல்லேகலையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 25 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 66 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

Related posts

போட்டி நமக்குக் கைகூடா நிலையில் முடிந்தது – கோஹ்லி

நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருட போட்டித் தடை

56வது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி; ஆரம்பம்