உள்நாடு

இருநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 286 இலங்கையர்கள் இன்று (30) காலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் மெல்பேர்ன் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 605 இலக்க விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, இந்தியாவின் மும்பை நகரிலிருந்த இலங்கைப் படையினர் 18 பேரை ஏற்றிக்கொண்டு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான மற்றொரு விமானமும் இன்று (30) கட்டுநாயக்கவை வந்தடைந்தது.

நாட்டை வந்தடைந்துள்ள 304 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொரோனா : பலி எண்ணிக்கை 545 ஆக உயர்வு

IMF அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் வெள்ளியன்று

டிசம்பரில் கிராம அலுவலர் போட்டிப் பரீட்சை!