உள்நாடு

இராதாகிருஷ்ணன் தலைமையில் ஆசிரியர் சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது!

(UTV | கொழும்பு) –

ஆசிரியர் சேவையிலிருந்து ஆலோசனை சேவைக்கு உள்ளீர்க்கும் போது வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளத்திற்கும் வழங்கப்படும் சம்பளத் தரத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு தொடர்பில் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இந்த சிக்கலுக்குத் தீர்வு வழங்கும் வரை நியமனங்களை தற்காலிகமாக பிற்போட வேண்டும் என குழுவின் கருத்தாக இருந்ததுடன், தமது சேவைக் காலத்தில் ஆலோசகர் ஒருவராக உள்ளீர்க்கப்படும் போது முன்னர் கிடைத்த சம்பளத்துக்குக் குறைவான சம்பளம் வழங்குவது நியாயமில்லை என குழு குழுவின் கருத்தாக இருந்தது.

இங்கு எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, ஆசிரியர் ஆலோசகர் சேவைப் பதவிகளில் உள்ள 1,982 வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், ஆசிரியர் ஆலோசகர் பதவிகளின் கடமைகள் மற்றும் விடயதானங்கள் குறித்தும் அங்கிருந்த அதிகாரிகளிடம் வினவினார். அதற்கமைய, பல சிக்கல்கள் நிலவும் சூழ்நிலையில் ஆசிரியர்களை ஆலோசனை சேவையில் இணைத்துக் கொள்ள முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அது குறித்து மேலும் கலந்துரையாட வேண்டும் என்றும் குழுவின் கருத்தாக இருந்தது. அத்துடன், பாலர் படசலைகளின் செயல்பாடுகள் மற்றும் பாலர் பாடசாலைக் கல்வியை எவ்வாறு முறைப்படுத்தலாம் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பாலர் பாடசாலைக் கல்விக்கான தேசியக் கொள்கையை சுமார் ஒரு மாத காலம் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, பாலர் பாடசாலைக் கல்விக்கான தேசியக் கொள்கை உள்ளடக்கிய செயற்பாட்டுத் திட்டத்தை சம்பந்தப்பட்ட நிறுவங்கள், திணைக்கள் உள்ளிட்ட அனைவரினதும் பங்களிப்பில் தற்பொழுது வரைபு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், பாலர் பாடசாலை கல்வி தொடர்பில் மாகாண ரீதியில் பல்வேறு கொள்கைகள் செயற்படுத்தப்படுவதால் பொதுவான தேசியக் கொள்கை ஒன்றை தயாரிப்பது முக்கியமானது என குழுவின் கருத்தாக இருந்தது. மேலும், முன்பிள்ளைப் பருவ கல்வி தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும் தனியார் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பாடசாலைப் பாடத்திட்டங்களில் பெண்களை வேறுபடுத்தி நடத்துவதை நியாயப்படுத்தும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாக கண்காணிக்கப்பட்டுள்ளதால் பாடத்திட்டங்களின் ஒரு சில அத்தியாயங்கள் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் என்பது குழுவின் கருத்தாக இருந்தது. அதற்கமைய, கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு சமாந்தரமாக இந்த விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு குழு பரிந்துரைத்தது.

அதற்கு மேலதிகமாக, பகல் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பிலும் குழு வினவியதுடன், 7,926 படசலைகளை உள்ளடக்கும் வகையில் 18 இலடசம் மாணவர்களுக்கு பகல் உணவு வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் இந்தக் குழுவில் கலந்துகொண்டனர். அத்துடன், எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சந்திம வீரக்கொடி ஆகியோர் குழுவின் தலைவரின் அனுமதிக்கமைய இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்பும் IMF

editor

பிரதமர் இத்தாலி விஜயம்

கொரோனா சவாலும், சவாலாகும் கடும் வறட்சியும்