வகைப்படுத்தப்படாத

இராணுவ வீரர் அபிநந்தன் இந்தியாவை வந்தடைந்தார்

(UTV|INDIA) இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் அதிகாரிகள் அட்டாரி – வாகா எல்லையில் இந்தியா வசம் ஒப்படைத்தனர். ஏராளமான மக்கள் எல்லையில் திரண்டு அபிநந்தனுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல்கள் நடந்தன. அதேவேளை இந்தியா இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் இந்திய விமான்படை விமானியான அபிநந்தனை கைது செய்யதனர்.

இதற்கிடயில் அபிநந்தனின் கைது குறித்து சர்வதேச நாடுகள் மத்தியில் பரவளாக பேசப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா விமானப்படை விமானியான அபிநந்தனை விடுதலை செய்வதாக அந்நாட்டு பாராளுமன்றமத்தில் தெரிவித்தார்.

அத்தோடு விடுதலை செய்யப்பட்ட இந்திய விமானியான அபிநந்தனை வாகா எல்லை வழியாக அழைத்து வரப்பட்டு அட்டாரி எல்லையில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்பட்ட பின் அவரை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

கடுவல மாநகரத்தை மேம்படுத்த நடவடிக்கை

இலங்கை கொடியுடன் கூடிய கப்பல் ஒன்று கடத்தல்!

Showers likely in evening or night