சூடான செய்திகள் 1

இராணுவ வண்டி புகையிரதத்துடன் மோதிய விபத்தில் 06 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு (UPDATE)

(UTV|COLOMBO)  கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 06 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுள்ளனர்.


கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 04 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 03 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இராணுவ கவச வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து கூறினார்.

கொழும்பில் இருந்து யாழப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்துடன் குறித்த இராணுவ வாகனம் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் ஜூலையில்…

புத்தளத்தில் காணாமல்போன சிறுமியைத் தேடும் பணிகள் ஆரம்பம்

தொடர் வெடிப்புச் சம்பவங்கள்-FBI மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்