சூடான செய்திகள் 1

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரியா லியனகே நியமனம்

(UTVNEWS | COLOMBO) – இலங்கை இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக மேல் மாகாண பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் தலைவராக கடமையாற்றி வந்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலை அடுத்து, மேல் மாகாண மற்றும் புத்தளம் மாவட்ட இராணுவ, விமானப்படை, கடற்படை, பொலிஸ் பிரிவுகள் யாவும் கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.முன்னணியின் பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று பிற்பகல்

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஏற்பட்டுள்ள கடன் சுமை