உள்நாடு

இராணுவ தளபதிப் பதவியில் இருந்து ஷவேந்திர விடைபெறுகிறார்

(UTV | கொழும்பு) – பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்றுடன்(31) இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகவுள்ளார்.

பின்னர் அவர் ஜூன் 1, 2022 முதல் பாதுகாப்புப் படைகளின் புதிய தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.

பதவி விலகும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா படையினர் மத்தியில் உரையாற்றும் நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகியுள்ளது.

ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட போது பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் இருந்தார்.

இதேவேளை, தற்போது இராணுவ பிரதானியாக கடமையாற்றும் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே எதிர்வரும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி முதல் புதிய இராணுவ தளபதியாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்த்தனை உயர்வு

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் 201 பேர் விளக்கமறியலில்

வறட்சியில் பாதிக்கப்பட்ட லக்சபான!