வகைப்படுத்தப்படாத

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தொடர்பான சுற்றிவளைப்பு ஆரம்பம்

(UTV|COLOMBO)-இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களைக் கைதுசெய்வது தொடர்பாக இன்று முதல் சுற்றிவளைப்புக்களை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள், சட்ட ரீதியாக அதில் இருந்து விலக வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 23ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், வழங்கப்பட்டிருந்த இந்த பொது மன்னிப்புக் காலத்தில் 11,232 பேர் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக, ரொசான் செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

மியன்மாரின் நாடாளுமன்றத்தை உறுதிபடுத்துவதற்கு இலங்கை உதவ வேண்டும்

BAR briefed on SOFA, MCC & Land Act

ලොව පුරා සමාජ මාධ්‍ය බිඳ වැටීම යලි යථා තත්වයට.