வகைப்படுத்தப்படாத

இராணுவத்தின் குறி தவறியதால் சொந்த வீரர்கள் 11 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – பிலிப்பைன்ஸில் இராணுவத்தினர், தீவிரவாதிகளை இலக்குவைத்து நடத்திய வான்வழித் தாக்குதல் ஒத்திகையின்போது குறி தவறியதால் இராணுவத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸின் மாராவி தீவுப் பகுதிகளில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் போரிட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இடம்பெற்ற ஒத்திகை தாக்குதலின்போது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில்  11 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
அத்துடன், 8 இராணுவத்தினர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் டெல்ஃப்ன் லோரென்சனா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரிடையே, சரியான ஒருங்கிணைப்பு இல்லாததே இந்த மோசமான சம்பவத்திற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

මීළඟ විශේෂ කාරක සභාවට මාධ්‍ය වාරණයක්

ஈரானில் விமான விபத்து – 11 பேர் பலி

Former UNP Councillor Royce Fernando before Court today