சூடான செய்திகள் 1

இராணுவத்தினரை புகையிரத சாரதிகளாக பயிற்றுவிக்க அனுமதி

(UTVNEWS|COLOMBO) – இன்று 12வது நாளாகவும் ரயில் தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை, இன்று முற்பகல் வேளையில் 12 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக புகையிரத போக்குவரத்து அதிகாரி வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ரயில் இயந்திர சாரதிகள் மற்றும் நிலைய அதிபர்களாக இராணுவத்தினரை பயிற்றுவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பதில் போக்குவரத்து அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

3 கட்டங்களாக அவர்களுக்கான பயிற்சியை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக குருநாகலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இன்று காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

சஜித் – கூட்டமைப்பு இடையே இன்று சந்திப்பு

நாலக்க டி சில்வா இன்று நான்காவது நாளாகவும் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்