உலகம்உள்நாடு

இராஜினாமா செய்த மோடி: மீண்டும் பிரதமராக 8ஆம் திகதி பதவியேற்பார்

இந்தியாவின் பிரதமராக கடமைபுரிந்த மோடி மரபின்படி சற்றுமுன் இராஜினாம செய்துள்ளதுடன்,  இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) எதிர்வரும் 8ஆம் திகதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், பிரதமர் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க கோர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது. பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை.

இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை. இவர்களின் ஆதரவு எல்லாம் இருந்தால்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும். இனிமேல் இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற நிலைமை பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மோடி கூட்டணி ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. மாலை 4மணிக்கு ப.ஜா.காவின் கூட்டணியின் முக்கிய கூட்டம் எட்டப்பட்டு பின்னர் தீர்க்கமான முடிவு கிட்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிய தீர்மானம்

. நாட்டில் வேகமாக பரவும் நோய்கள் – எச்சரித்துள்ள சுகாதார திணைக்களம்.

பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களுக்கான கோரிக்கை