உள்நாடு

இராஜாங்க அமைச்சர்கள் திங்களன்று பதவியேற்க உள்ளனர்

(UTV | கொழும்பு) –   இராஜாங்க அமைச்சர்கள் 35 பேர் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையின் பின்னர் இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களின் எல்லைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு தனியான வரவு செலவுத்திட்டத்தை ஒதுக்கி நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை உடனடியாக வழங்காவிட்டால் வரவு செலவுத் திட்டத்தில் ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

GMOA பணிப்புறக்கணிப்புக்கு இன்று தீர்வு

8,435 பேருக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்