சூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சரின் சர்ச்சை!!!

(UTV|COLOMBO) கொக்கேய்ன் பயன்படுத்தும் அமைச்சர்கள் குறித்த பட்டியலை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரை தமக்கு வழங்கவில்லை என சாபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற  அமர்வு ஆரம்பித்த வேளை அவர் இதனை அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பிரதி சபாநாயகரும் இது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசிய கட்சி, அவைத்தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் குழுவொன்றையும் நேற்றைய தினம் நியமித்தது.

அந்த குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாளை காலை 9.30 மணிக்கு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அழைக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

களனி பல்கலைக்கழகம் தமது 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது

நேற்றையதினம் குறைந்தபட்ச உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வு இன்று

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்