உள்நாடு

இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த

(UTV | கொழும்பு) – கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்த இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவி ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி நடைபெற்ற புதிய அமைச்சரவைப் பதவிப்பிரமாண நிகழ்வில், 28 அமைச்சுகளை ஜனாதிபதி, பிரமர் உள்ளிட்ட 25 பேர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அத்துடன் 39 இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஏற்கனவே வர்த்தமானிப்படுத்தப்பட்ட அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் பட்டியலுக்கு அமைய, 40 ஆவது இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த தற்போது பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

Related posts

மின்கட்டணத்திற்கு சலுகை..?

மேலும் 29 பேர் பூரண குணம்

விசேட தேவையுடையோருக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

editor