உள்நாடு

இராஜாங்கனை பகுதியில் நாளை தபால் மூல வாக்களிப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவிற்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை(29) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் போக்குவரத்து தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு நாளை தபால் மூல வாக்கெடுப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி நாளை(29)முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையான காலப்பகுதியில் தபால் மூல வாக்களிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் வலயக்கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் குறித்த தபால் மூல வாக்களிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா

editor

காலியில் இராஜாங்க அமைச்சர் சானக்கவின் மாமனார் சுட்டுக் கொலை!

பிரதமர் – அமெரிக்க கருவூலத் திணைக்களக் குழுவினர் இடையே கலந்துரையாடல்