உள்நாடு

இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை

(UTV | கொழும்பு) –  தான் இரகசியமாக கண்காணிக்கப்படுகிறேனா என இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தனது ட்விட்டர் செய்தியில் வினவியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் ஊடகங்கள் இல்லாதபோது, ​​தனது தனிப்பட்ட கலந்துரையாடல்களை ஊடகங்கள் எவ்வாறு பெறுவது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரை கனடா உயர் ஸ்தானிகர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அண்மையில் சந்தித்தமை தொடர்பில் இரண்டு பிரதான உள்நாட்டு செய்தித்தாள்களால் செய்தி வெளியிட்டிருந்தன.

மேலும், இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹால்டன் மற்றும் தென் கொரிய தூதுவர் இடையேயான சந்திப்பு குறித்தும் உள்ளூர் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன.

பங்களாதேஷ் மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளாகும்.

எனினும், இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை எனவும், கனடா உயர் ஸ்தானிகர் கண்காணிக்கப்படுகிறார் என்ற செய்திகளையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

editor

பறந்து கொண்டிருந்த காக்கைகள்கொத்து கொத்தாக விழுந்து உயிரிழப்பு!

மேலும் 50 பேர் பூரண குணமடைந்தனர்