உள்நாடுகாலநிலை

இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை

பல பகுதிகளுக்கு இன்று (17) மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

ஜமுனா கப்பல் இலங்கையில்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்!

06 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு