உள்நாடு

 இரத்தினம் மற்றும் ஆபரண கண்காட்சி இம்மாதம் கொழும்பில்

(UTV | கொழும்பு) –  இரத்தினம் மற்றும் ஆபரண கண்காட்சி இம்மாதம் கொழும்பில்

இரத்தினம் மற்றும் ஆபரண வர்த்தக பெயரை உலகுக்கு ஊக்குவிக்கும் FACETS SRI LANKA கண்காட்சி இம்மாதம் 7 முதல் 9 வரை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் உள்ள ஏட்ரியம் லொபியில் நடைபெறவுள்ளது.

கண்காட்சியானது உயர்தர வர்த்தக கொள்வனவாளர்கள் முதல் இரத்தினக்கல் மற்றும் நகை இறக்குமதியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் வரை பல பங்குதாரர்களை ஈர்க்கும் வகையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனியார் நலன் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைகிறது.

Facets Sri Lanka கண்காட்சியானது இலங்கை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண சங்கத்தினால் தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகார சபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத் தொழிற்துறையை, குறிப்பாக இரத்தினக்கல் பட்டை திட்டுபவர்கள் பிரிவை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை கருத்திற்க் கொண்டு, கொள்வனவாளர்களை ஈர்ப்பதற்காக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நிகழ்ச்சி விளம்பர பிரசாரங்களை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு.

“இலங்கையில் ஊடக சீர்திருத்தங்கள் தேவை” நாமல் ராஜபக்ச

21 மாவட்டங்களில் நாளை தளர்த்தபடவுள்ள ஊரடங்கு