உள்நாடு

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 30க்கும் மேற்பட்டோர் காயம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்றைய தினம் (22) நிகழ்ந்ததாகவும், விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கண்டி-தெஹிவளை மற்றும் கல்முனை-கொழும்பு வழித்தடங்களில் இங்கும் பேருந்துகளே விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் விபத்துக்குப் பின்னர் அந்த வீதியில் மேலும் பல வாகனங்கள் விபத்துக்களில் சிக்கியுள்ளதாகவும், இதன் காரணமாக கொழும்பு- கண்டி பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

கண்டியில் தேசிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்

editor

உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளி இன்று வெளியீடு

வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை