(UTV | கொழும்பு) -இருவேறு புதிய ஜனாதிபதி செயலணிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஜனாதிபதி செயலணி மூலமாக கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளங்கண்டு அவற்றை பாதுகாத்தல் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாதுகாப்பான நாடு, சட்டத்தை மதிக்கும் பண்பான மற்றும் ஒழுக்கமுள்ள சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காகவும் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு செயலணிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமை தாங்கவுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.